டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் அனுஹாசன். இந்திரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனு, அதன்பின்னர் ஆளவந்தான், ரன், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது இவர் வல்லதேசம் என்ற படத்தில் நடித்துள்ளார். நந்தா இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். பின்னர் விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது...
ஒரு பெண்ணை மையமாக வைத்து வல்லதேசம் படத்தை இயக்கியுள்ளனர். இப்போதெல்லாம் பெண்களை மையமாக வைத்து படங்கள் வருவது குறைந்துவிட்டது. எனது குருநாதர் பாலசந்தர் பெண்களை முன்னிலைப்படுத்தி பல படங்களை இயக்கினார். இன்றைய சூழலில் வீட்டில் தான் பெண்களின் ராஜ்ஜியம் இருக்கிறது, சினிமாவில் குறைவு தான். வல்லதேசம் போன்ற படங்கள் அதிகமாக வர வேண்டும். இப்படியொரு படத்தை இயக்கியதற்காக படக்குழுவை பாராட்டுகிறேன். மேலும் இந்தப்படத்தை குறைந்த ஆட்களை வைத்து இயக்கியதாக இயக்குநர் சொன்னார்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வைத்து படம் இயக்கி வெறும் 100 பேர் மட்மே பார்க்கும் சினிமாவின் நிலை மாறி, எதிர்காலத்தில் 200 பேரை வைத்து படம் இயக்கி, கோடிக்கணக்கான பேரை அந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும். வருங்கால சினிமா இனி இப்படித்தான் இருக்க போகிறது. இது சினிமாவுக்கு நல்ல விஷயம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.