ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவை பொறுத்தவரை எப்போதாவது ஒரு சிலருக்கு இப்படி அமைந்து விடுவது உண்டு. இருபது வருடங்களுக்கு முன்பு சுவலட்சுமி என்றொரு நடிகை இருந்தார் தெரியுமா..? அவர் நடித்த படங்களை எல்லாம் கவனித்து பார்த்தால் அனைத்து படங்களிலும் ஒரு கண்டிப்பான டீச்சர் மாதிரியே தான் நடித்திருப்பார். அவரது பாடி லாங்குவேஜும் டயலாக் டெலிவரியும் அப்படித்தான் இருக்கும். இப்போது லேட்டஸ்ட்டாக தமிழ்சினிமாவில் லட்சுமி மேனனுக்கு அப்படி அமைந்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மலையாள நடிகை ஸ்வேதா மேனனுக்கோ வேறு விதமான பிரச்சனை..
தான் நடித்த படங்களில் எல்லாமே எதற்கும் பயப்படாத தைரியமான பெண்ணாக நடித்திருப்பார் ஸ்வேதா மேனன்.. ஆரம்பத்தில் இரண்டு படங்களில் அப்படி நடித்தவரிடம் தொடர்ந்து அதே மாதிரி கேரக்டர்களோடு தான் கதை சொல்ல வருகிறார்களாம். தற்போது சுரேஷ்கோபியுடன் நடித்துவரும் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்தில் கூட தம்புராட்டி என்கிற கிராமத்து தைரியசாலி பெண் வேடம் தானாம்.. “எனக்கு ரொம்பவே சாப்டான, நகைச்சுவையான கேரக்டர்களில் நடிக்கத்தான் ஆசை.. தயவு செய்து தைரியமான பெண்மணி கேரக்டர் என இனி யாரும் என்னிடம் கதைசொல்லிக்கொண்டு வராதீர்கள்.. நான் ரொம்பவே டயர்ட் ஆகிட்டேன். ஆள விடுங்க சாமி” என கதறாத குறையாக கும்பிடு போடுகிறார் ஸ்வேதா மேனன்.