'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் கேரள ஆயுர்வேத பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகை மஞ்சு வாரியர், ஸ்டெபியின் நியமனத்திற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதோடு அவரை வரவேற்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்த சந்தோஷத்தை தனது பேஸ்புக் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். மஞ்சு வாரியாரின் இந்த சந்தோஷத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.. அவரும் ஒரு காலத்தில் டென்னிஸ் வீராங்கனையாக ஆசைப்பட்டவர் தானாம்.
“எனது சின்ன வயதில் நானும் ஸ்டெபி கிராப், மோனிகா செலஸ் ஆகியோரைப்போல மிகப்பெரிய டென்னிஸ் வீராங்கனையாக வரவேண்டும் என ஆசைப்பட்டேன். குறிப்பாக ஸ்டெபியின் தங்க நிற கூந்தலும் விளையாட்டின்போது சிவக்கும் அவரது நாசியும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். டென்னிஸ் வீராங்கனையாவதற்கு இவ்வளவு கடினமான் பயிற்சிகள் வேண்டும் என அப்போது எனக்கு தெரியவில்லை. தற்போது கேரள ஆயுர்வேதத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ஸ்டெபியை வரவேற்க தயாராக காத்திருக்கிறேன்” என மகிழ்ச்சியயுடன் கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.