ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குங்கப்பூவும் கொஞ்சுபுறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கியவர் ராஜமோகன். இவர் அடுத்தப்படியாக எங்க ஏரியா உள்ள வராத என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக அதர்வா நடிக்க இருக்கிறார். ஈட்டி, கணிதன், சண்டிவீரன் படங்களில் நடித்துள்ள அதர்வா அடுத்தப்படியாக இந்தப்படத்தில் நடிக்கிறார். ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது. ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்குள்ளாகவே படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் ஆரம்பமாகின. சென்னை, கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.