அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமான நடிகை சுவாதி ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தற்போது யட்சன், யாக்கை போன்ற தமிழ் படங்களில் நடித்து வரும் சுவாதி தான் நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான திரிபுரா படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றார். இயக்குநர் ராஜ் கிரண் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஜூலை மாத இறுதியில் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பெண்ணை மையப்படுத்திய இப்படம் திகில் காட்சிகள் நிறைந்த பேய் படம் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. திரிபுரா படத்தில் நடிகர் நவீன் சந்திரா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி நடித்த கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக திரிபுரா படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கிரேசி மீடியா பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படுள்ளது.இப்படத்தை தமிழில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.