இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வெங்காயம் என்ற படத்தை இயக்கி அதில் ஒரு கேரக்டரிலும் நடித்தவர் சங்ககிரி ராஜ்குமார். அந்த படம் அவருக்கு ஓரளவு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதையடுத்து முற்றிலும் புதுமுகங்களை வைத்து நெடும்பாறைக்காடு என்றொரு படத்தை இயக்கினார். காட்டுவாசிகள் சம்பந்தப்பட்ட கதையில் உருவான அந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து விற்பனைக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஒரு ஹாலிவுட் நிறுவனம் தயாரித்துள்ள ஒன் என்றொரு படத்தையும் இயக்கி முடித்துள்ளார் ராஜ்குமார். இந்த படத்தில் அவர் மட்டுமே நடித்திருக்கிறார். அதோடு படத்தின் இசை, கேமரா, எடிட்டிங் என அனைத்து வேலைகளையும் அவர் ஒருவர் மட்டுமே செய்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தை அவர் பிரதமர் மோடிக்கும் போட்டுக்காட்ட திட்டமிட்டிருக்கிறார். அதற்கான வேலைகளும நடந்து வருகிறதாம். மேலும், இந்த ஒன் படம் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்டிருப்பதால் உலகம் முழுக்க ரிலீஸ் செய்யப்படுகிறதாம்.