‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சில வருடங்களுக்கு முன் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜய் நடித்த படம் சச்சின். மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் படத்தில் கல்லூரி மாணவராக நடித்தார் விஜய். எதற்கு இந்த ப்ளாஷ்பேக்? காரணமிருக்கிறது. மீண்டும் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் தற்போது நடிக்கும் புதிய படத்திலும் ('விஜய் 59') கல்லூரி மாணவராக நடிக்கிறார் விஜய். இந்தப்படத்திற்கான பூஜை கடந்த 26ஆம் தேதி சென்னை ஈசிஆரில் உள்ள கேரளாஹவுசில் நடைபெற்றது. 'விஜய் 59' படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். 'கத்தி' படத்திற்குப் பிறகு விஜய்யுடன் 2வது முறையாக நடிக்கிறார் சமந்தா.
இப்படத்தில் சமந்தா கல்லூரி மாணவியாக நடிக்கிறார். ஏற்கெனவே 'நீதானே என் பொன்வசந்தம்', 'அஞ்சான்' படங்களிலும் கல்லூரிப் பெண்ணாக சமந்தா நடித்திருக்கிறார் என்பதால் இந்தப்படத்தில் அவர் கல்லூரிப் பெண்ணாக நடிப்பதில் வியப்பில்லை. கல்லூரி மாணவராக விஜய் நடிப்பதுதான் விசேஷம். 'ராஜா ராணி'யைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் படம் என்பதால் அவருடைய முதல் படத்தைப்போலவே இதுவும் ஒரு காதல் படமாக இருக்கும் என்று தோன்றுகிறது. இப்படம் குறித்த மற்றொரு தகவல்...ரஜினி நடித்த 'மூன்று முகம்' படத்தின் டைட்டில் இந்தப்படத்துக்கு வைக்கப்படலாம் என்ற தகவல் காதில் விழுகிறது.