ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழிலும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கவுள்ளார். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் மகேஷ் பாபுவும் இணைந்து தயாரிக்கின்றார். இப்படத்தில் நாயகியாக முதலில் ஒப்பந்தமான ராகுல் ப்ரீத்தி சிங் கால்ஷீட் பிரச்சனையால் படத்திலிருந்து விலகி விட்டதாகவும், நடிகை சமந்தா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகை பிராணிதா இப்படத்தில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகை ராஷி கண்ணா மூன்றாவது நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை நடிகை ராஷி உறுதி செய்துள்ளார். ஆனால் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்னும் இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை. இசையமைப்பாளர் மிக்கி ஜெ மேயர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஸ்ரீமந்துடு படத்தை முடித்த பின்னர் மகேஷ்பாபு இப்படத்தில் கலந்து கொள்வார் என கூறப்படுகின்றது.