தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆரி நாயகனாக நடித்த படம் நெடுஞ்சாலை. கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் ஷிவதா நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றதோடு, ஷிவதாவின் நடிப்பும் அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது. ஆனபோதும், பெரிய ஹீரோக்களின் படங்கள் அவருக்கு கமிட்டாகவில்லை.
அதனால் அடுத்தபடியாக ஜீரோ என்ற படத்தில் அஸ்வின் என்ற ஹீரோவுடன் தான் கமிட்டானார். முந்தைய படத்தில் ஷிவானியின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் அவருக்கு இந்த படத்திலும் வெயிட்டான வேடம் கொடுத்திருக்கிறார்களாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கு கண்டிப்பாக பெரிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஷிவானி.
அதன்காரணமாக, தற்போது சில சிறிய ஹீரோக்களின் படங்கள் முற்றுகையிட்டபோதும், ஜீரோ படம் வெளியாகட்டும் அதன்பிறகு சொல்கிறேன் என்று சிக்காமல் நழுவிக்கொண்டு வருகிறார் ஷிவானி. ஆனால் அவர் பெரிய அளவில் எதிர்பார்க்கும ஜீரோ படமோ, ஹீரோ வேல்யூ இல்லாததால் வியாபாரம் ஆகாமல் தடுமாறிக்கொண்டு கிடப்பதாக சொல்கிறார்கள்.