ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நேரம், சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்த பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். இதன்பிறகு பாபியின் புகழ் மேலோங்கியிருக்கிறது. தற்போது மசாலா படம், உறுமீன், பாம்பு சட்டை, இறைவி உள்ளிட்ட அரை டஜன் படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்து வருகிறார். இப்போது புதிதாக மெட்ரோ என்ற படத்திலும் சத்தமில்லாமல் நடிக்க ஒப்பந்தமாகி, அந்த படத்தின் ஷூட்டிங் துவங்கியிருக்கிறது. ஆள் படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் தான் இப்படத்தை இயக்கி-தயாரிக்கிறார்.
பாபி சிம்ஹா, ஸ்ரீரிஷ், சென்ட்ராயன், சத்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆள் படத்தை வித்தியாசமாக இயக்கிய ஆனந்த், இந்தப்படத்தை தங்கத்தை மையமாக வைத்து உருவாக்க இருக்கிறார். நம் நாட்டில் தங்கம் அதிகம் கிடைக்கிறது, ஆனாலும் நம் நாடு ஏழை நாடாகவே இருக்கிறது. பெரும்பாலான தங்கம் கறுப்பு தங்கமாக சமூக விரோதிகளின் கையில் உலாவுகிறது என்பது மாதிரியான கதையில் மெட்ரோ படம் உருவாகி வருகிறது என்கிறார் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன்.