ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரின்ஸ் மகேஷ் பாபுவின் புதிய படத்தின் டைட்டில் ஸ்ரீமந்துடு தான் என்று அழகு தேவதையான ஸ்ருதிஹாசன் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மாறப்போகின்றது என்று சமீப காலமாக சில தகவல்கள் வெளிவந்தது. இந்த புதிய படத்தின் டைட்டில் தான் என்ன என்று டோலிவுட்டும், பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டரில், ஐதராபாத்தில் ஸ்ரீமந்துடு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக வந்துள்ளது. விரைவில் நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள்', என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை. இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. ஸ்ரீமந்துடு படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். பிரபல இயக்குனர் கோரடல சிவா இயக்கும் ஸ்ரீமந்துடுவில் பிரபல இசை அமைப்பாளர் ஸ்ரீ தேவிபிரசாத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், பூர்ணா, நதியா, அமனி, சம்பத் ராஜ் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் குடும்ப சென்டிமென்டோடு ஆக்ஷன் கலந்து வழங்கப்பட இருக்கின்றது.