பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஸ்வரூபம் 2, பாபநாசம் என படங்கள் வரிசை கட்டி நிற்கும்போது, அதிரடியாக, தூங்காவனம் படத்தையும் துவக்கியுள்ள உலகநாயகன் கமலஹாசன், இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கரின் படத்தில் எந்தளவுக்கு பிரமாண்டம் இருக்குமோ, அதே அளவு சமூக கருத்துக்களும் அதிகம் இருக்கும். அப்படி, கமல் இருவேடங்களில் நடிக்க, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான "இந்தியன்" படம் பெரும்வெற்றி பெற்றது. படத்தின் கதை, அதில் பொதிந்திருந்த சமூக கருத்துக்கள், பாடல், இசை, நடனம் என எல்லாத்துறைகளிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு குறைவில்லாமல், அப்படம் அமைந்திருந்தது என்றே கூறலாம்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தை எடுப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.எம்.ரத்னம், இப்படத்தை தயாரிக்க உள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஷங்கருடன் சமீபத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர், தற்போது எந்திரன் 2 எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதனிடையே, இந்தியன் 2 படத்தின் திரைக்கதைப்பணிகளிலும் ஷங்கர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.