பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூர்யா, நயன்தாரா, பிரணீதா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸு என்கிற மாசிலாமணி' படம் 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும் அளவில் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கை நடைபெற்றது. அப்போது படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான 'யு' சான்றிதழ் வழங்கினார்கள். அதனால் உடனடியாக படத்தின் பெயரை 'மாஸ்' என்பதிலிருந்து 'மாஸு என்கிற மாசிலாமணி' என மாற்றிவிட்டார்கள். தமிழக அரசின் வரி விலக்கை பெறவே இந்த மாற்றம் செய்யப்பட்டது.
பேய்ப் படம் என்பதால் எப்படியும் 'யு-ஏ' சான்றிதழ்தான் கிடைக்கும் என்று படக்குழுவினர் நினைத்ததால்தான் முதலில் 'மாஸ்' என ஆங்கிலத் தலைப்பு வைத்திருந்தார்கள். அதற்கு 'மாசிலாமணி' என்பதன் சுருக்கம்தான் 'மாஸ்' என்றும் விளக்கம் சொன்னார்கள். ஆனால், 'மாசிலாமணி' என்பதன் சுருக்கத்தை 'மாசி அல்லது மாசு' என்று வேண்டுமானால் அழைக்கலாம். இருந்தாலும் 'மாஸு என்கிற மாசிலாமணி' என்றே இன்று வரை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்னவர் வரை டிவிட்டர், ஃபேஸ்புக் வலைத்தளங்களில் கூட 'Masss' என்றே குறிப்பிட்டு வந்த படக்குழுவினர் நேற்றிலிருந்து 'Massu Engira Masilamani' என்று போட ஆரம்பித்துவிட்டார்கள். 'மாஸு' எவ்வளவு 'காஸு' அள்ளும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.