ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித்துடன் நடிப்பவர்கள் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதும், அவருடைய சமையலைப் பற்றிப் பாராட்டிப் பேசுவதும் வழக்கமான ஒன்று. அனைத்துக் கலைஞர்களுடனும் எந்த விதமான பேதமும் பார்க்காமல் அஜித் பழகும் குணம் அவருக்கு திரையுலகிலேயே பல ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அதோடு, அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பின் போது ஏதாவது ஒரு நாளில் அவர் கையாலேயே பிரியாணி சமைத்து அனைவருக்கும் அவர் பரிமாறுவது வழக்கம். அஜித்தின் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்கள், அவருடைய சமையலுக்கும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இப்போது அஜித்துக்கும் அவருடைய சமையலுக்கும் புது ரசிகை ஒருவர் கிடைத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, அஜித்துடன் தற்போது புதிதாக ஜோடி சேர்ந்துள்ள ஸ்ருதிஹாசன்தான். 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் கடந்த சில நாட்களாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். அஜித்துடன் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. அவருடன் பழகிய சில நாட்களிலேயே அஜித் புராணம் பாட ஆரம்பித்துவிட்டார் ஸ்ருதிஹாசன்.