பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. முதல்படமே கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. அடுத்தப்படியாக அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இந்தப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து இப்போது மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார் சிவா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு தற்போது அஜித்-56 என்ற பெயரில் உருவாகி வருகிறது.
கடந்தாரம் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக அஜித்தும், அவரது தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகின்றன. இதுதொடர்பான படங்கள் கூட சமீபத்தில் வௌியாகின.
இந்நிலையில் அஜித் படத்தை முடிப்பதற்குள்ளாகவே தனது அடுத்தபடத்தின் கதையையும் உருவாக்கி வைத்திருக்கிறாராம் இயக்குநர் சிவா. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக தகவல் வௌியாகியுள்ளது. இதுதொடர்பாக சிவகார்த்திகேயனிடம், சிவா கதை சொன்னதாகவும், அவரும் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படமும் பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.
சிவா, அஜித்தை படத்தை முடித்த பின்னர் சிவகார்த்திகேயன் படத்தை துவங்க இருக்கிறார்.