இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள படம் 'ரஜினி முருகன்'. கடந்த சில வாரங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதன்பின் படத்தின் முதல் பார்வையை ஏப்ரல் 25ம் தேதியன்று வெளியிட்டனர். அடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டை ஜுன் 7ம் தேதி நடத்தப் போவதாக முன்பே அறிவித்திருந்தனர். அதன்படி படத்தின் இசை வெளியீட்டை ரசிகர்கள் முன்னிலையில் மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.
அதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட படத்தின் நட்சத்திரங்களும், மற்ற கலைஞர்களும் கலந்து கொள்ளப் போகிறார்களாம். அதையடுத்து படத்தின் வெளியீட்டை ஜுலை 17ம் தேதியன்று வெளியிடப் போகிறார்கள். 'ரஜினி முருகன்' படத்தின் முதல் பார்வை, இசை வெளியீடு, படத்தின் வெளியீடு ஆகியவற்றை குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப் போவதாக மார்ச் மாதம் 20ம் தேதியன்றே முறைப்படி அறிவித்துவிட்டார்கள்.
அதிலிருந்து எந்த மாற்றமும் செய்யாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் 'ரஜினி முருகன்' குழுவினர் செய்யப் போகிறார்களாம். இந்தப் படம் மீது ஆரம்பிக்கும் போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்து விட்டது குறிப்பிடத்தக்கது.