இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கோலிவுட்டில், சுப்ரமணியபுரம் எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சுவாதி, டோலிவுட்டில் சுவாமி ரா ரா மற்றும் கார்த்திகேயா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை சுவாதி, நாயகியை மையப்படுத்திய திகில் திரைப்படமான திரிபுரா என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் ராஜ் கிரண் இயக்கத்தில், தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழிலும் திரையிடப்படும் என்று கூறப்படுகின்றது. இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை டோலிவுட்டின் பிரபல இயக்குநர் வி.வி.விநாயக் நேற்று வெளியிட்டுள்ளார். நடிகர் அகில் நாயகனாக நடிக்கும் படத்தை மும்முரமாக இயக்கி வரும் இயக்குநர் வி.வி.விநாயக் தனது வேலைகளுக்கு நடுவில் திரிபுரா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதற்கு படக்குழுவினர் இயக்குநர் வி.வி.விநாயக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். திரிபுரா படத்தில் நடிகர் நவீன் சந்திரா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.