தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளிவந்துள்ள '36 வயதினிலே' படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதாக படத்தைத் தயாரித்துள்ள சூர்யா மகிழ்ச்சியடைந்துள்ளார். அதனால் தன்னுடைய மனைவி ஜோதிகா, குழந்தைகள் மற்றும் படக் குழுவினருடன் கேக் வெட்டி அந்த வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.
ரோஷன் ஆன்ட்ரூஸ் மலையாளத்தில் இயக்கி வெளிவந்து வெற்றி பெற்ற படமான 'ஹௌ ஓல்ட் ஆர் யு' படத்தின் ரீமேக் தான் '36 வயதினிலே'. அந்தப் படத்தைப் பார்த்ததும் அதுதான் ஜோதிகாவின் ரீ-என்ட்ரிக்கு சரியான படம் என சூர்யாவும், ஜோதிகாவும் முடிவு செய்தனர். மேலும் அந்தப் படத்தைத் தானே தயாரிப்பது என சூர்யாவும் முடிவு செய்தார். குறுகிய காலத் தயாரிப்பாக உருவான அந்தப் படம் கடந்த 15ம் தேதி வெளியானது.
ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட அந்தப் படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக 'ஏ' சென்டர்களில் மட்டும் படத்திற்கு வரவேற்பு இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து இது போன்ற படங்களைத் தயாரிக்க உள்ளதாக சூர்யா அறிவித்துள்ளார்.