இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு காலத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்து இளம் பெண் ரசிகைகளைக் கவர்ந்தவராக இருந்தவர் கார்த்திக். அவருடைய மகன் கௌதமை மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் நாயகனாக நடிக்க வைத்தார். அந்தப் படம் எதிர்பாராமல் தோல்வியடைந்து விட்டது. அடுத்து தெலுங்கில் வெற்றி பெற்ற 'அலா மொதலந்தி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'என்னமோ ஏதோ' படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படமும் தோல்வியடைந்தது. மூன்றாவதாக வெளிவந்துள்ள 'வை ராஜா வை' படத்தை அந்தப் படக்குழுவினர் மட்டுமே வெற்றிப் படம் என மாற்றி மாற்றிச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், 'வை ராஜா வை' படம் 13 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ளதாம். அந்தத் தொகையை படம் வசூலிப்பது கடினம் என்கிறார்கள்.
இதனிடையே கௌதம் கார்த்திக் நடித்து வரும் சில படங்கள் பணப் பிரச்சனையால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்தப் படங்கள் மேலும் வளருமா அல்லது அப்படியே நின்று விடுமா என்பதும் சந்தேகமாக உள்ளது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், லட்சமி மேனன் நடிக்க 'சிப்பாய்' என்ற படம் 2013ம் ஆண்டு ஆரம்பமானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நின்றுவிட்டது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் ராஜ்குமார் இயக்கி வரும் 'ரங்கூன்' படமும் பாதியில் நிற்கிறதாம். இரண்டு படங்களுமே ஃபைனான்ஸ் பிரச்சனையில் தடுமாறி வருகிறது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு 'சக்கரக்கட்டி' படத்திற்குப் பிறகு இயக்கி வரும் 'இந்திரஜித்' படத்திலும் கௌதம்தான் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம் எப்போது முடியும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது.
திரையுலக வாரிசாக நுழைந்துள்ள கௌதம் கார்த்திக் ஒரு முழுமையான, தனக்கான வெற்றியைச் சுவைக்கும்படியான படத்தைக் கொடுத்தால் மட்டுமே இன்றைய போட்டியில் சமாளிக்க முடியும் என்கிறார்கள்.