இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
த்ரிஷா தற்போது 'அப்பாடக்கர், போகி' என்ற இரு படங்களில் நடித்து வருகிறார். “லயன், பூலோகம்” ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். தெலுங்குப் படமான 'லயன்' விரைவில் வெளிவர இருக்கிறது. 'பூலோகம்' படம் இனியும் வெளியாகுமா என்பது சந்தேகம்தான். இந்தப் படங்களோடு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு படத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழ், கன்னடத்தில் தயாராகும் வேறொரு படத்திலும் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.
தனக்குத் தொடர்ந்து கிடைத்து வரும் பட வாய்ப்புகளால்தான் திருமண நிச்சயத்தைக் கூட த்ரிஷா முறிவு செய்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். இன்னும் கூட சில படங்களில் த்ரிஷாவை நாயகியாக நடிக்கக் கேட்டு வருகிறார்களாம். இதனிடையே, தமிழ், கன்னடத்தில் த்ரிஷா நடிக்கும் படத்திற்கு 'நாயகி' என பெயர் வைத்திருப்பதாக அந்தப் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனரான கோபி இயக்க உள்ளார்.
இந்தப் படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் த்ரிஷா தென்னிந்தியத் திரையுலகத்தில் பிஸியான நடிகையாகத்தான் இருக்கப் போகிறார் போலிருக்கிறது.