ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த 17ஆம் தேதி வெளியான 'காஞ்சனா 2' தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதே நாளில் 'காஞ்சனா 2'வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' படத்தை தெலுங்கிலும் வெளியிட முயற்சி செய்தனர். ராகவா லாரன்ஸ் மீது தெலுங்கு திரைப்படத்துறையில் ஒரு பஞ்சாயத்து இருப்பதால் காஞ்சனா - 2 படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடியாமல்போனது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி தமிழில் வெளியான 'காஞ்சனா 2' படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால், வரும் மே 1ஆம் தேதி தெலுங்கில் வெளியாகி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை ஒரு கை பார்க்கவிருக்கிறது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ரேணுகா, ஸ்ரீமன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படம் வெளியான முதல் 10 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் 35 கோடிகளை வாரிக்குவித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீதான விசயத்தில் சமரசம் எற்பட்டத்தை அடுத்து, 'காஞ்சனா 2'வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது.
லாரன்ஸ், டாப்ஸி, கோவை சரளா ஆகியோருக்கு தெலுங்கில் பெரிய வரவேற்பிருப்பதோடு, ஏற்கெனவே முனி, காஞ்சனா என இரண்டு படங்களும் அங்கேயும் ஹிட்டாகியிருப்பதால் முனி 3 ஆம் பாகமான 'கங்கா'விற்கு ஆந்திராவிலும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முன்னணி தமிழ் ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு இணையாக பெரிய விலைக்கு 'கங்கா' படத்தை விற்றிருகிறார்கள்.