இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காஞ்சனா - 2 படத்தின் அதிரடி வெற்றிக்கு கொஞ்சமும் சளைக்காமல் தியேட்டர்களில் வெற்றிகரமாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது ஓ காதல் கண்மணி. ராவணன், கடல் என தொடர்ந்து தோல்விப்படங்களை இயக்கியதால் அவுட் டேட்டட் டைரக்டர் என்று மணிரத்னத்தை ரசிகர்கள் சொல்லும்நிலை உருவானது. இதை உணர்ந்தோ என்னவோ தனக்கு கை வந்த காதல்கதையை கையில் எடுத்தார். அதே சமயம் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைத்தால் படத்தின் பட்ஜெட் எகிறிவிடும் என்பதால், மலையாளப்பட ஹீரோவான துல்கர் சல்மான், அவருக்கு ஜோடியாக நித்யா மேனனை நடிக்க வைத்தார். இதன் மூலம் படத்தின் பட்ஜெட்டில் பல கோடிகள் மிச்சமானது. படப்பிடிப்பு நாட்களையும் அதிகரிக்காமல் மிக குறைவான நாட்களில் படத்தை முடித்தார். ஓ காதல் கண்மணி படத்தைப் பொருத்தவரை பெரிய சம்பளம் ஏ.ஆர்.ரகுமானுக்குத்தான்.
எனவே அதிகபட்சமாக 6 கோடிக்குள் படத்தின் பட்ஜெட்டை அடக்கிவிட்டார் மணிரத்னம். ஓ காதல் கண்மணி படத்தை சுமார் 20 கோடிக்கு பிசினஸ் செய்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெற்றது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 10 கோடிவரை வசூல் செய்திருக்கிறது ஓ காதல் கண்மணி.