மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள டைரக்டர் பைஜூகுமார் தாமோதரன்.. சுருக்கமாக பைஜூ. இவர் ஒரு டாக்டரும் கூட. இவரும் கிட்டத்தட்ட இன்னொரு ராம்கோபால் வர்மா மாதிரி தான்.. அவ்வப்போது சர்ச்சைக்குரிய விமர்சனங்களால் போட்டு தாக்குபவர். நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு, தான் இயக்கிய 'பேரறியாதவர்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தை அளித்து, அதன் மூலம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு 2013க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்ததும் இவர் தான்.
கடந்த ஜனவரி மாதம் மலையாள சேனல் ஒன்று, சொந்த பிரச்னைகளுக்காக அதிகம் செய்திகளில் அடிபட்ட மஞ்சு வாரியருக்கு நியூஸ் மேக்கர் விருதை வழங்கியபோது அதை அதிகம் விமர்சித்தவர்.. அதுமட்டுமல்ல, மோகன்லால் தனது லாலிசம் இசைக்குழு மூலம் தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்கவிழாவில் நடத்திய இசை நிகழ்ச்சி சொதப்பலானது குறித்து மோகன்லாலை காட்டமாக விமர்சித்தவரும் கூட.
இப்படி சோஷியல் மீடியா மூலம் தனது கருத்துக்களை பகிரங்கமாக கூறி வரும் பைஜூ, அதற்கு ஆதரவாகத்தானே குரல் கொடுப்பார். அப்படித்தான் தங்களது படங்களை விமர்சிப்பதாலேயே சோஷியல் மீடியாக்களை எதிர்க்கும் சில இயக்குனர்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளார். 'சோஷியல் மீடியா விமர்சனங்களை எதிர்ப்பது முட்டாள்தனம்.. முடிந்தால் நீங்கள் நல்ல படத்தை எடுக்க முயற்சி செய்யுங்கள்.. நல்ல விஷயம் என்றால் சோஷியல் மீடியா பாராட்ட தயங்கியது இல்லையே” என மீண்டும் ஒரு சர்ச்சைக்கு திரி கொளுத்தியுள்ளார் பைஜூ.