'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சூர்யாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை வெங்கட் பிரபுவால் கொடுக்க முடியுமா என்ற மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'மாஸ்'. அஜித்துக்கு ஒரு 'மங்காத்தா' போல, சூர்யாவுக்கு இந்த 'மாஸ்' படத்தை வெங்கட் பிரபு கொடுப்பார் என சிலர் சொல்லி வருகிறார்கள். அது எந்த அளவிற்கு இருக்கும் என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும். 'மாஸ்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முழுமையாக முடிவடைந்து விட்டது. 'பேட்ச் ஒர்க்' எனப்படும் விடுபட்ட சில காட்சிகளின் படப்பிடிப்பையும் படக்குழுவினர் முடித்து விட்டார்களாம். கடந்த சில மாதங்களாகவே படத்தின் கிராபிக்ஸ் உட்பட பல திரைக்குப் பின்னால் உள்ள டெக்னிக்கல் விஷயங்கள் மும்முரமாக நடந்து வருகின்றனவாம். யுவன்ஷங்கர் ராஜாவும் சில நாட்களுக்கு முன் அவருடைய பின்னணி இசை வேலையை ஆரம்பித்து விட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஒரு பாடலுக்கு தமன் இசையமைத்தது சர்ச்சையை எழுப்பிய நிலையில் அதற்கு யுவனே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். மே 15ல் படத்தை வெளியிட அறிவிப்பு வெளியிட்டு விட்டதால் இன்னும் இருக்கும் ஒரு மாத கால அவகாசத்திற்குள் அனைத்து வேலைகளையும் முடித்து விடுவார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.