'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கும் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. தற்போது அல்லு அர்ஜுன் திரிவிக்ரம் இயக்கத்தில் சன் ஆப் சத்யமூர்த்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடாம். அதாவது அல்லு தனது உறவினரான பிரபல ஹீரோவான சாய் தரம் தேஜின் ரே படம் சென்ற வாரம் தான் ரிலீசாகி உள்ளது. அதனால் அல்லு தனது படத்தை இரண்டு வாரங்களுக்கு பிறகு ரிலீஸ் செய்ய விரும்புகிறாராம். ஆனால் அதற்கு இயக்குனர் திரி விக்ரமிற்கு உடன்பாடில்லையாம்.