மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சில வருடங்களுக்கு முன்பு ஆடியோ ரைட்ஸ் விற்பனை மூலமே இசையமைப்பாளர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் தவிர ஏனைய இசையமைப்பாளர்களான அனிருத், இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களின் ஆடியோ ரைட்ஸ் கூட சமீபகாலமாக விலைபோவதில்லை. இன்னொரு பக்கம், முன்னணி ஆடியோ நிறுவனங்கள் ஏகப்பட்ட கண்டிஷன்களையும் போடுவதால் ஆடியோ ரைட்ஸை விற்க தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர்.
அதே நேரம் படத்தின் ஆடியோ சிடி மார்க்கெட்டுக்கு வரவில்லை என்றால் அது படத்துக்கு பலவீனமாகவும் இருக்கும். எனவே தயாரிப்பாளர்களே சொந்தமாக ஆடியோ கம்பெனி தொடங்கி தங்களின் படப்பாடல்களை வெளியிடத் தொடங்கிவிட்டனர். முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் க்ரீன் ஆடியோ என்ற கம்பெனியைத் தொடங்கி கொம்பன் ஆடியோவை வெளியிட்டது.
இப்போது மற்றொரு முன்னணி தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ், தற்போது தேனாண்டாள் ஆடியோ என்ற கம்பெனியைத் தொடங்கி உள்ளது. தேனாண்டாள் ஆடியோவின் மதல் வெளியீடாக காஞ்சனா - 2 பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.