ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தலைப்பில் இருப்பதைப் போன்றுத்தான் இந்த 'எலி' படத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் அனைவரும் சொல்லப் போகிறார்கள். ஏற்கெனவே 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் வடிவேலுவுடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்து நடனமாடியது கோலிவுட் ஹீரோக்களுக்குக் கடுப்பேற்ற அதன் பின் ஸ்ரேயாவை தமிழ்த் திரையுலகத்தை விட்டே விலக்கி வைத்து விட்டார்கள். ஆனால், 'எலி' படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து சதா நடித்துள்ள இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் ஒரு பக்கம் ஆச்சரியப்பட்டுப் போனாலும், பொறாமைப்பட்டும் போவார்கள்.
சதாவுக்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மார்க்கெட் இல்லை என்பதால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் வடிவேலுவுடன் சதாவை ஜோடியாகப் பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவரும் தன்னுடைய படங்களில் ஜோடியாக நடிப்பவர்களைப் பற்றி கண்ணும் கருத்துமாகவே இருக்கிறார். இதற்கு முன் 'தெனாலிராமன்' படத்தில் நடித்த மீனாட்சி தீட்சித் கூட மிக அழகாக இருப்பார்.
'தெனாலிராமன்' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் இந்த 'எலி' படத்தில் நகைச்சுவையை மட்டுமே முக்கியமாக வைக்க வேண்டும் என்று வடிவேலுவும், இயக்குனர் யுவராஜும் இரவு பகலாக யோசித்து வருகிறார்களாம்.
'எலி, புலி, பாயும் புலி' என தொடர்ச்சியாக வரும் படங்கள் நமக்கு 'கிலி' எற்படுத்தாமல் இருந்தால் சரி...