பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.. முடிந்ததும் தெரியவில்லை என்பது போல மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் என்னும் எப்பொழும் படத்தை வெற்றிகரமாக முடித்து இன்று ரிலீஸாகும் விதமாக தியேட்டர்களுக்கு அனுப்பிவைத்துவிட்ட ஆசுவாசத்தில் இருக்கிறார் படத்தின் இயக்குனரான சத்யன் அந்திக்காடு. படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குனர் மஞ்சு வாரியர் இஸ் தி பெஸ்ட் என குறிப்பிட்டுள்ளார்.
“மஞ்சு வாரியர் நடிக்க வந்த புதிதில் இயக்குனர் சொல்வதை செய்துவிட்டு போகும் கிளிப்பிள்ளையாகத்தான் இருந்தார். ஆனால் போகப்போக நடிப்பில் ராட்சசியாக மாறிவிட்டார். 15 வருடங்களுக்கு முன் தூவல் கொட்டாராம் படத்தை இயக்கியபோது அதில் நடித்த சுகன்யா, ஒரு பாடல் காட்சியில் இவர் அளவுக்கு மேட்ச் செய்யமுடியாமல் தடுமாறியபோது, அவருக்காக மஞ்சுவாரியரை அண்டர்பிளே செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்” என சுகன்யாவுக்காக மஞ்சு வாரியர் அடக்கி வாசித்த கதையை நினைவு கூர்ந்திருக்கிறார் சத்யன் அந்திக்காடு.