ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாகார்ஜுனாவின் இளைய மகன் அகினேனி அகில் அறிமுகமாகும் புதிய படத்தில் ஒரு கவர்ச்சி வேடத்தில் நடிக்க நடிகை ராஷி கண்ணாவை அழைத்துள்ளார் இயக்குநர் விவி விநாயக் அவர்கள், ஆனால் இந்த வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம் ராஷி கண்ணா. இதற்கான காரணத்தை அவர் கூறும்போது அட இந்த பொண்ணு சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கேப்பா என்றுதான் தோன்றுகிறது.
தற்போது ராஷி கண்ணா டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார். நடிகர் கோபிசந்துடன் ஜில் படத்தில் நடித்துள்ளார், வருகிற மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. அதுமட்டுமின்றி ரவி தேஜாவின் நடிப்பில் உருவாகிவரும் பெங்கால் டைகர் படத்திலும் இவர் நாயகியாக நடித்து வருவதால் தற்போது இந்த கவர்ச்சி வேடம் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம். ஏம்மா இப்படி நல்லா நடிச்சிட்டு இருக்கிற பொண்ண அழைச்சுட்டு போய் ஒரு 2 பீஸ் துணியை கொடுத்து அப்படியே வீட்டுக்கு அனுப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களோ...