வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நமீதாவைத் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து வரும் இன்னொரு குஜராத் நடிகை நிகிஷா பட்டேல். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் தலைவன், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதனால் இன்னமும் கவனிக்கப்படாத நடிகையாக இருந்து வருகிறார். மேலும், தற்போது நகுல் நடித்துள்ள நாரதன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் முந்தைய படங்களை விட கிளாமராக நடித்திருக்கும் நிகிஷாவுக்கு அடுத்தபடியாக தமிழில் படங்கள் புக்காகவில்லை. இருப்பினும் தெலுங்கில் சில படங்களை கைப்பற்றி நடித்து வரும் அவர், ஒரு படத்தில் குத்தாட்ட புயலாகவும் உருவெடுத்துள்ளாராம்.
அந்த படம் இன்னும் திரைக்கு வராதபோதும், நிகிஷாவின் அதிரடி ஆட்டம் டோலிவுட்டையே அதிர வைத்திருக்கிறதாம். அதனால் மேலும் சில மெகா ஹீரோக்களின் படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கிறதாம். இந்த நிலையில், ஆரம்பத்தில் தமிழ் படங்களில் கண்டிசன் போட்டு நடித்து வந்த நிகிஷா, தற்போது இனி எந்த கண்டிசனும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை என்று கூறி வருபவர், சில கமர்சியல் டைரக்டர்களிடம் தனது கவர்ச்சிக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தருமாறு வேண்டுகோள் வைத்து வருகிறார்.