பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் சத்தமில்லாமல் இயக்கி முடித்திருக்கும் 'ஓ காதல் கண்மணி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு வழக்கம் போல் இளம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் இன்னும் பாப்புலர் ஆகாத மலையாள நடிகரான துல்கர் சல்மான், நித்யா மேனன் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் இது ஒரு காதல் கதை என்பதை டைட்டிலைப் பார்த்ததுமே யாராக இருந்தாலும் சொல்லிவிடுவார்கள்.
மணிரத்னம் மீண்டும் 'அலைபாயுதே' போன்றதொரு படத்தைக் கொடுப்பார் என அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல பலரும் எதிர்பார்க்கிறார்கள். மணிரத்னத்துக்கே உரிய மழை, ரயில், கடல், காதல், பைக் என அவர் புகுந்து விளையாடும் சில விஷயங்களை படத்தில் புகுத்தியிருக்கிறார் என்பது டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது.
மணிரத்னம் படம் என்றாலே அவருக்கே உரிய 'டைரக்டோரியல் டச்' படம் முழுவதும் நிறைந்திருக்கும். 'கடல்' படத்தின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் என்பதால் 'ஓ காதல் கண்மணி' படத்தை ரசிகர்கள் நிறையவே எதிர்பார்க்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான், பி.சி.ஸ்ரீராம் கூட்டணி மீண்டும் ஒரு 'அலைபாயுதே' வெற்றியைத் தருமா என்பதே பலரின் எதிர்பார்ப்பு.