டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட் திரையுலகின் மகாராஜா ரவிதேஜா, விரைவில், ஹரீஷ் சங்கர் இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளார். அக்ஷய் குமார், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற ஸ்பெஷல் 26 படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்ய ஹரீஷ் சங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், ரவி தேஜா நடிக்க உள்ளார். ரவிதேஜா, தற்போது கிக் -2 மற்றும் பெங்கால் டைகர் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், ஹரீஷ் சங்கரும், சுப்ரமண்யம் ஃபார் சேல் படத்தில் பிசியாக உள்ளார். தங்கள் கைவசம் இருக்கும் படங்களை முடித்தவுடன், ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கில் இருவரும் இணைய உள்ளனர். ஷாக் மற்றும் மிராபகே படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.