ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
GVM என்று திரையுலகினரால் அழைக்கப்படும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் 'உப்பு கருவாடு' படத்தில் ஸ்டீவ் வாட்ஸ் இசையில் மதன் கார்க்கி எழுதிய “புது ஒரு கதவு திறக்குது” என்ற பாடலை பாடியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கருணாகரன், நந்திதா நடிக்கின்றனர்.
“ இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு அந்த துள்ளலை தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ் கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். GVM பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார். கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.