Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீரியஸ் முகமூடியை கழட்டிவிட்டு காமெடிக்கு மாறுகிறார் பஹத் பாசில்..!

21 பிப், 2015 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Fahad-Fazil-goes-to-Comedy-role'

மலையாள இளம் முன்னணி நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசில், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதனால் அவரையும் மீறி பெரும்பாலான அவரது படங்களில் அவரது கேரக்டர் சீரியஸாகவே அமைந்திருக்கும். ஆனால் அவர் சீரியஸாக செய்யும் விஷயங்கள் ஆடியன்ஸுக்கு காமெடியாக இருக்கும், உதாரணத்திற்கு அவர் நடித்த நார்த் 24 காதம், பெங்களூர் டேய்ஸ் ஆகிய படங்களை சொல்லலாம்.


ஆனால் இப்போது தனது சீரியஸ் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு முதல் முதலாக 'போர்பன் ஸ்ட்ரீட்' என்கிற படத்தில் முழுக்க காமெடி கலந்த கேரக்டராக நடிக்க உள்ளார். அதற்கேற்ற ஸ்கிரிப்ட்டை பக்காவாக தாயார் செய்துள்ளார் இயக்குனர் அபி வர்கீஸ். இவர் ஏற்கனவே இயக்கிய 'அக்கர காழ்ச்சகள்' படத்தை பார்த்தவர்களுக்கு இவர் பஹத் பாசிலை காமெடி ரோலில் ஜொலிக்க வைப்பார் என சத்தியம் செய்யாமலேயே நம்புவார்கள்.


அதுமட்டுமல்ல படத்தின் வசனங்களை எழுதுபவர்கள் யார் தெரியுமா..? ஏற்கனவே 'ஏபிசிடி' படத்தில் துல்கர் சல்மான்- ஜேக்கப் கிரிகரி கூட்டணிக்காக எழுதிய காமெடி வசனங்களில் பட்டையை கிளப்பியவர்கள் தான். இந்தப்படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த லூகாஸ் பிரச்னிக் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி உட்பட சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in