ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப்படத்தில் நடித்த ஜோடியை அடுத்தப் படத்தில் நடிக்க வைப்பது ஒருவகையான வியாபார தந்திரம்தான். இந்த அடிப்படையில்தான் கத்தி படத்தில் இணைந்த விஜய் சமந்தா ஜோடியை மீண்டும் ஜோடி சேர்த்திருக்கிறார்கள். விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வரும் சமந்தா, இந்தப் படத்தை அடுத்து நடிக்கவிருப்பது அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்.
கத்தி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதால் ராசியான ஜோடி என்று சொல்லியே படத்தை கூடுதல் தொகைக்கு வியாபாரம் செய்துவிடுவார்கள் என்பது ஒரு பக்கமிருக்க.... இன்னொரு பக்கம், அஞ்சான் என்ற ஒரு தோல்விப்படத்தில் நடித்த சூர்யா - சமந்தா ஜோடியை மீண்டும் ஜோடி சேர வைப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.
தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் தனது மூன்றாவது தமிழ் படமாக இயக்கும் படத்திற்கு 24 என்ற படத்தை இயக்குகிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இப்படத்தைத் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ, ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் மலையாள ஹவ் ஓல்ட் ஆர்யூவின் ரீ-மேக் என இரண்டு படங்களை தயாரித்து வருகிறது 2டி நிறுவனம். அதோடு, மூன்றாவது தயாரிப்பாக இயக்குனர் விக்ரம் கே.குமார் இயக்கத்தில் 24 படத்தையும் தயாரிக்கிறது. பெயர் வைத்துள்ளார்.