தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தயாரித்துள்ள படம் - உத்தம வில்லன். இப்படத்தில் கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா, பூஜா குமார், பார்வதி நாயர், ஜெயராம், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் முதலானோர் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
உத்தம வில்லன் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கமல் தரப்பில் சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு மாதம் முன்னர் அதாவது, அடுத்த மாதம் (மார்ச்) 1-ஆம் தேதி உத்தம வில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இவ்விழாவை சென்னையிலுள்ள மிகப்பெரிய ஆடிட்டோரியங்களில் ஒன்றான டிரேட் சென்டரில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இவ்விழாவில் பெங்களூரை சேர்ந்த பிரபல கலைக்குழுவினரின் ஆட்டக்களரி என்கிற பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. உத்தம வில்லன் படத்தில் சில காட்சிகளில் கேரளாவின் பாரம்பர்ய கலைகளில் ஒன்றான தைய்யம் கலை இடம் பெறுகிறது. இந்த கலையுடன் தொடர்புடைய கலைதான் ஆட்டக்களரி. எனவேதான் ஆட்டக்களரி நிகழ்ச்சியை உத்தமவில்லன் இசைவெளியீட்டுவிழாவில் இடம்பெறச்செய்ய வேண்டும் என்று விரும்பினாராம். அவரது எண்ணப்படியே இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.