'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
'ஆந்திராவாலா' ஜூனியர் என்.டி.ஆர் தற்போது தெலுங்கில் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் தான் 'டெம்பர்'. படத்தை இயக்கியுள்ளவர் 'போக்கிரி' மூலமாக ஆல் இந்திய சினிமாவையும் அதிரவைத்த பூரி ஜெகநாத்.. இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இதுதவிர பெங்காலி ஹாட் கேக்கான மதுரிமா பானர்ஜியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற டெம்பர் பட ஆடியோ ரிலீசின்போது அம்மணி மட்டும் மிஸ்ஸிங்.. இயக்குனர் பூரி ஜெகநாத் தான் திட்டமிட்டு அவரை விழாவில் கலந்துகொள்ள முடியாமல் செய்துவிட்டாராம். காரணம் இந்தப்படத்தில் மதுரிமா ஒப்பந்தமானது ஜூனியருக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லையாம். இயக்குனர் சொன்னதன் பேரில் அரைமனதுடன் சம்மதித்திருந்தாராம்.
அதனால் ஆடியோ ரிலீசின்போது மதுரிமா கலந்துகொண்டு அதில் ஏதாவது பந்தா காட்டினால், அதன்மூலம் தேவையில்லாத சங்கடங்கள் எதுவும் உருவாகிவிட கூடாது என்றுதான் அவரை தவிர்த்துவிட்டாராம் பூரி ஜெகனாத். ஏற்கனவே இந்தி படங்களிலும் மற்றும் மலையாளத்தில் வெளியான 'கூதரா' படத்திலும் நடித்துள்ள மதுரிமா, தமிழில் 'ஆம்பள' படத்திலும் நடித்துள்ளார்..