ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல்ஹாசன், அஜித் - விஜய் என்று அந்தக் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் - சிம்பு என்ற கூட்டணியும் பேசப்பட்டது. ஆனால், சிம்பு நடித்து கடந்த சில ஆண்டுகளாக எந்தப் படமும் வராத சூழ்நிலையில் அப்படி ஒரு போட்டிக் கூட்டணி இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் கிடைத்த நல்ல பெயரையும், வெற்றியையும் தக்க வைத்துக் கொள்ள சிம்பு தவறிவிட்டார். அவருடைய மார்க்கெட்டை அவரேதான் கெடுத்துக் கொண்டார் என திரையுலகில் உள்ளவர்களே சொல்வார்கள்.
“வாலு, வேட்டை மன்னன்” ஆகிய படங்களின் நிலை என்ன என்பது சிம்புவுக்கே தெரியாது. இடையில் ஆரம்பிக்கப்பட்ட 'இது நம்ம ஆளு' படம் ஓரளவுக்கு முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. இழந்த தனது மார்க்கெட்டை நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தாவது கைப்பற்றி விடலாம் என சிம்பு நினைத்து ஆரம்பிக்கப்பட்ட படம்தான் அது. ஆனாலும், சிம்பு ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வராமல், பல பிரச்சனைகளால் படம் தட்டுத் தடுமாறி தற்போது டீசர் வெளியீடு வரை வந்து நின்றிருக்கிறது.
டீசருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்தாவது சிம்பு மாறினால் நன்றாக இருக்கும் என அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். பொங்கலன்று யு டியூபில் வெளியிடப்பட்ட 'இது நம்ம ஆளு' படத்தின் டீசர் நேற்று 20 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தின் டிரைலருக்குக் கூட இதுவரை 18 லட்சம் பார்வையாளர்களே கிடைத்துள்ளார்கள். ஆக, சிம்புவை ரசிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை 'இது நம்ம ஆளு' டீசர் புரிய வைத்திருக்கிறது.
இது சிம்புவுக்குப் புரிந்தால் சரி...!