தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எங்கேயும் எப்போதும் படத்தில் சரவணன் இயக்கத்தில் நடித்த ஜெய், இற்போது அவர் இயக்கி வரும் வலியவன் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். முந்தைய படத்தை விட இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது அப்படத்தின் டைரக்டர் சரவணன், நாயகி ஆண்ட்ரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால், படத்தின் நாயகனான ஜெய் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, மீடியாக்கள் ஜெய் வராதது ஏன்? என்று டைரக்டர் சரவணனிடம் கேட்டபோது, அதுபற்றி என்னைக் கேட்பதைவிட தயாரிப்பாளரை கேட்பதுதான் சரியாக இருக்கும் என்றார். மேலும், இந்த படத்தில் பங்கு பெற்றுள்ள பலர் இங்கே வந்திருக்கிறோம். அதனால் நிகழ்ச்சிக்கே வராத ஜெய்யைப்பற்றி கேட்பதை விட, வந்திருப்பவர்களிடம் பட்த்தில் அவர்கள் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி கேட்கலாமே என்றார் சரவணன். ஆனால், கடைசி வரை ஜெய் வராததற்கான காரணத்தை சொல்லாமலேயே சமாளித்தார்.