Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வலியவன் படத்துக்காக சிக்ஸ்பேக் ஒர்க்அவுட் செய்த ஜெய்!

10 ஜன, 2015 - 10:16 IST
எழுத்தின் அளவு:

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கியவர் சரவணன். அந்த படத்தில் ஜெய்-அஞ்சலி, சர்வானந்த்-அனன்யா ஆகியோர் நடித்திருந்தனர். அப்படம் மெகா ஹிட்டானது. அதையடுத்து விக்ரம்பிரபு- சுரபி நடிப்பில் இவன் வேற மாதிரி படத்தை இயக்கினார் சரவணன். இந்த நிலையில், தற்போது வலியவன் என்ற படத்தை ஜெய்-ஆண்ட்ரியாவை ஜோடி சேர்த்து இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா , சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இயக்குனர் சரவணன், ஆண்ட்ரியா, நா.முத்துக்குமார், விவேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது வலியவன் படமும் பற்றி டைரக்டர் சரவணன் கூறுகையில், எனது முதல் இரண்டு படங்களையும் போன்று இந்த படம் சமூக விழிப்புணர்வு கொண்ட ஒரு கதையில் உருவாகியிருக்கிறது. லவ் வித் ஆக்சன் படம் இது. ஜெய்-ஆண்ட்ரியாவை அல்ட்ரா மாடர்ன் கெட்டப்பில் காண்பித்திருக்கிறேன். அவர்களது காஸ்டியூம் வெஸ்டர்ன் பாணியில் இருக்கும். அதனால் வித்தியாசமான அவுட் லுக் தெரியும். மேலும், இந்த படத்துக்கான ஒவ்வொரு காட்சிக்காகவும் மெனக்கெட்டிருக்கிறேன். ஜெய்க்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். அதோடு, இந்த படத்துக்காக தனது உடல்கட்டை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றி நடித்துள்ள ஜெய், பாக்சிங் சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதனால் இந்த படத்தில் இதுவரை பார்க்காத ஜெய்யை பார்க்கலாம். வலியவன் வலுவான கதையில் தயாராகியிருக்கிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in