‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நம் அனைவருக்குமே மிகவும் பிடித்த விஷயமாகவும், முக்கிய விஷயமாகவும் ஒரு சிலதான் இருக்க முடியும். அதில் சில மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கலாம். நமக்குப் பிடித்தது மற்றவர்களுக்குப் பிடிக்காது, மற்றவர்களுக்குப் பிடித்தது நமக்குப் பிடிக்காது. ஆனால், அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது, அதுதான் நன்றாகத் தூங்குவது. இன்றைய பிஸியான காலகட்டத்தில் நாம் அனைவருமே தூங்குவதற்குக் கூட நேரமில்லாமல் பணம் சம்பாதிக்கவே ஓடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், என்னதான் பணம் கோடிகளில் வந்தாலும் கூட தூங்குவதை மட்டும் விடவே மாட்டேன் என்கிறார் நடிகை காஜல் அகர்வால். எவ்வளவு படங்கள் வேணாலும் நடிக்கலாம், எவ்வளவு வேணாலும் சம்பாதிக்கலாம். இருந்தாலும் தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக தூங்கி விடுவேன் என்கிறார் காஜல். நடிகர், நடிகைகளாக இருப்பவர்களால் கண்டபடி சாப்பிட முடியாது, கொஞ்சம் உணவுக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதே சமயம், நான் தூங்க வேண்டிய நேரத்தில் கரெக்டாக தூங்கி விடுவேன் என்கிறார். அவர் நன்றாகத் தூங்கினாலும், பல நேரங்களில் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து விடுகிறாரே...அதற்கு எப்படி பொறுப்பேற்பார்...