நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
எல்லாம் அவன் செயல் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்.கே.யும், இயக்குனர் ஷாஜி கைலாசும் இணைந்துள்ள படம் - என் வழி தனி வழி.
கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடைபெற்று வந்தது.
தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தில் ஆர்.கே.யுடன் பூனம் கௌர் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த மீனாக்ஷி தீட்சித் இன்னொரு கதாநாயகியாக, நடிக்கிறார்.
இவர்களுடன் ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், தம்பி ராமையா, சிங்கமுத்து என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
காவல்துறை சம்பந்தப்பட்ட கதை. இதனை பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளோம்! எல்லாம் அவன் செயல் படம் வந்தபோது என்னை எல்லோரும் வக்கீல் என்றே நினைத்தார்கள்! அதைப்போல இப்படம் வெளிவந்தால் என்னை ஒரு ஐ.பி.எஸ்.அதிகாரி என்று சொல்ல வைக்கும் விதமாக இதில் என்னுடைய கேரக்டர் அமைந்துள்ளது. நல்ல கதை களம்
என்று இப்படம் குறித்து சொன்ன ஆர்.கே., என் வழி தனி வழி. படத்தின் கதை ஜோர்டான், இஸ்ரேல் என பல நாடுகளில் பயணிக்கும் என்றும் சொல்கிறார்.
இளைய தளபதி, புரட்சித்தளபதி, சின்னத்தளபதி பட்டங்கள் வரிசையில் தனக்குத் தானே மக்கள் தளபதி என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார் ஆர்.கே.
இப்படிப்பட்ட பட்டங்கள் படத்தை ஓட வைக்குமா?