‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஒரு மொழியில் ஒரு படம் கமர்ஷியலாக மாபெரும் வெற்றி பெற்றாலோ, அல்லது அந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலோ உடனே அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து தயாரித்து வெளியிடும் உரிமையை வாங்க போட்டி ஆரம்பமாகிவிடும். அப்படித்தான் கத்தி படத்தின் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக, தமிழில் படத்தின் ரிசல்ட்டை கேள்விப்பட்ட சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள், அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையைக் கூட ஆரம்பித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் கதையும், காட்சிகளும் தெலுங்கு நேட்டிவிட்டிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்களாம். கண்டிப்பாக அங்கும் ஒரு பெரிய ஹீரோவை நடிக்க வைத்து நல்ல வெற்றியைப் பெறலாம் என தெலுங்குத் தயாரிப்பாளர்களும் ஆசைப்படுகிறார்களாம். கிராமம், விவசாயம் என மண் சார்ந்த கதைகளுக்குத் தெலுங்கில் எப்போதுமே மிகப் பெரிய வரவேற்பு உண்டு. அதோடு, முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அங்கு டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், ரீமேக் செய்யப்பட்டாலும் அவற்றிக்கு நல்ல வரவேற்பு இருந்ததையும் அவர்கள் கணக்கில் கொண்டுதான் இந்த பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறார்களாம்.
அப்படி கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமைக்கு நல்ல விலை கிடைக்கும்படி இருந்தால் படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து அடுத்த வாரம் வெளியிடுவதாக இருப்பதையும் நிறுத்தி விடுவார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடக்கும் பட்சத்தில் தெலுங்கு ரசிகர்கள் அவர்களது ஒரு அபிமான ஹீரோவுடன் கத்தி படத்தை நேரடித் தெலுங்குப் படமாகவே அடுத்த சில மாதங்களுக்குள் பார்த்து ரசிக்கலாம்.