ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
தமிழ் சினிமாவில் ஆர்யாவுக்குதான் ஹீரோயின் பிரண்டுகள் அதிகம். பூஜா, த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா ஆகியோர் ஆர்யாவின் வீட்டில் பிரியாணி சாப்பிட்டவர்கள். இந்த பிரியாணி கிளப்புக்குள் வந்திருக்கிறார் கார்த்திகா.
தற்போது புறம்போக்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்து வரும் கார்த்திகா வாயைத் திறந்தால் ஆர்யா புகழ்தான் பாடுகிறார். "நான் பார்த்தவர்களிலேயே ஆர்யாதான் ஜாலியான டைப். ஆனா நடிப்புன்னு வந்துட்டா சீரியசாகிடுவார். குளுமனாலில ஷூட்டிங் நடந்தபோது கஷ்டமான ஸ்டெப்புக்கெல்லாம் ஆடினார். அவர் நினைச்சிருந்தா அதை மாற்றச் சொல்லியிருக்கலாம். ஆனா நடிப்பு மேல அவருக்கு இருந்த பக்தியில அதை சொல்லவில்லை. நான் கார் ஓட்ட அவர் பக்கத்துல உட்கார்ந்து வர்ற மாதிரி ஒரு சீன். நான் அதிகமா கார் ஓட்டினதில்ல. பயந்துகிட்டே ஓட்டினேன். அவர்தான் தைரியம் கொடுத்து ஓட்டச் சொன்னார்.
படத்துல ஆர்யாவுக்கு சமமான கேரக்டர் எனக்கு. நானும் ஆக்ஷன் காட்சிகள்ல நடிச்சிருக்கேன். தனக்கு சரிசமமாக ஹீரோயின் இருப்பதை எந்த ஹீரோவும் ஒத்துக்க மாட்டாங்க ஆனா ஆர்யா ஒத்துக்கிட்டிருக்கார். அதுதான் ஆர்யா. என்கிறார் கார்த்திகா.