பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படம் ரிலீஸ் ஆன பிறகு என்ன சாதனையை நிகழ்த்துமோ தெரியாது...ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே, அதாவது தயாரிப்பு நிலையில் இருக்கும்போதே, இந்திய சினிமாவில் சாதனையை நிகழ்த்திய படமாகி இருக்கிறது.
என்ன சாதனை?
பட்ஜெட்டிலும், பிசினஸிலும், வசூலிலும், தமிழ் சினிமாவை விட ஹிந்திப் படங்கள் பல மடங்கு அதிகம். அது மட்டுமல்ல, பாலிவுட் படங்கள் உலகம் முழுக்க வெளியாகின்றன.
அப்பேற்பட்ட பாலிவுட் படங்களின் பட்ஜெட்டையே தென்னிந்திய திரைப்படங்களின் பட்ஜெட் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
குறிப்பாக தமிழ்ப்படங்களின் பட்ஜெட் பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை தாண்டிவிட்டன.
இதுவரை இந்தியாவில் தயாரான படங்களிலேயே அதிக தொகையில் உருவான படம் என்ற பெருமை ஐ படத்துக்குக் கிடைத்துள்ளது. அதாவது ஐ திரைப்படத்தின் பட்ஜெட் 185 கோடி ரூபாய்.
ஐ படத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் பாகுபாலி தெலுங்குப்படத்தின் பட்ஜெட். இதன் பட்ஜெட் 175 கோடி ரூபாய்.
மூன்றாவது இடத்தில் உள்ளது கோச்சடையான் படம். இப்படத்தின் பட்ஜெட் - 150 கோடி.
இப்படங்களுக்கு அடுத்த இடங்களை பிடித்திருப்பது..மூன்று ஹிந்திப்படங்கள்.
ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பட்ஜெட் 130 கோடி.
மற்றவை தூம் 3 மற்றும் கிரிஷ் -3. தூம் 3 படத்தின் பட்ஜெட் -125 கோடி.
க்ரிஷ் 3 படத்தின் பட்ஜெட் -115 கோடி.