டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் சலீம். இந்த படத்தை புதுமுக இயக்குனர் நிர்மல் குமார் இயக்கியிருந்தார். டில்லி மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தழுவி, அரசியல் முலாம் தடவி எடுக்கப்ட்ட இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதால், இப்போது நிர்மல்குமாருக்கு சான்ஸ் கொடுக்க சிலர் முன்வந்துள்ளனர்.
முக்கியமாக, அந்த படத்தை பார்த்து சூர்யா உள்ளிட்ட சில ஹீரோக்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி எனர்ஜி கொடுத்திருக்கிறார்கள். அதையடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தயாரித்த எல்ரட் குமார், தனது நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கித்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். தவிர மேலும் சில நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் உள்ளார்களாம்.
இதற்கெல்லாம் மேலாக, சலீம் படத்தைப்பார்த்த தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், நிர்மல்குமாரை ஐதராபாத்துக்கு அழைத்து சலீம் படத்தை தெலுங்கில் என்னை வைத்து ரீமேக் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம். இதனால் சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் நிர்மலகுமார். மேலும், மலையாள த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.