விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
தலைப்பு வைப்பதில் கடந்த கால மரபை உடைத்து ட்ரெண்ட் செட் ஏற்படுத்திய படம் - விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். தலைப்புக்காக மட்டுமல்ல வித்தியாசமான கதை அமைப்புக்காகவும் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று வெற்றியடைந்த படம் இது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் அப்படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கு மிகப்பெரிய பெயரை தேடிக்கொடுத்தது. சுமார் இரண்டு வருடங்கள் உட்கார்ந்து புதிய படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு அடுத்தப் படம் இயக்க தயாராகிவிட்டார் பாலாஜி தரணிதரன்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கும் அடுத்த படத்திற்கு ஒரு பக்க கதை என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். சில மலையாளப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த காளிதாஸ் என்ட வீடு அப்புவின்டேயும் என்ற படத்துக்காக 2003 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர். ஒரு பக்க கதை படத்தின் துவக்க விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு கதாநாயகன் காளிதாஸை ஊடகங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த விழாவில் கதாநாயகி பற்றி யாருமே பேசவில்லை. மேடையிலும் கதாநாயகியைக் காணோம். ஏன்..என்னாச்சு? காளிதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை பல மாதங்களாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் எதிர்பார்த்தபடி கதாநாயகி கிடைக்கவில்லை. அதற்குள் படத்தின் துவக்கவிழா நெருங்கிவிட, கதாநாயகி இல்லாமலே ஒரு பக்க கதை படத்தின் துவக்கவிழாவை நடத்திவிட்டனர். ஒரு பக்கம் கதாநாயகி வேட்டை நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் படப்பிடிப்புக்கு செல்வதற்கான ஆயத்தப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஷூட்டிங் கிளம்புறதுக்குள்ளே கதாநாயகியை கண்டுபிடிச்சுடுவீங்களா?