இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காதல் படத்தில் பரத்தின் சென்னை நண்பராக அறிமுகமானவர் சுகுமார். அதன் பிறகு 160 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். தற்போது அவர் திருட்டு விசிடி என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரபா, காதல் சுகுமார், மனோ ஆகியோர் ஹீரோக்களாகவும், சாக்ஷி, அஸ்வதா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
"இந்த உலகத்தில் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ, அவர்கள் இன்னொருவனால் ஏமாற்றப்படுவதோடு, தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான் வேதனையையும் சேர்த்தறுப்பான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை எடுத்து வருகிறேன். தூத்துக்குடியிலிருந்து ஒரு நண்பர்கள் ஒரு தீய நோக்கத்துக்காக காரில் சென்னை வருகிறார்கள். சென்னை வந்து சேர்வதற்குள் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்கிற கதை. முழு படமும் சென்னை, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் பயணத்தில் நடக்கிறது" என்கிறார் காதல் சுகுமார்.