Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில், ரீ-மேக்காகும் தட்டத்தின் மரயாது - இஷா தல்வாரே நடிக்கிறார்!!

01 செப், 2014 - 17:39 IST
எழுத்தின் அளவு:

மலையாளத்தில் பிரபல இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கி சூப்பர் ஹிட்டான படம் தட்டத்தின் மரயாத்து. நேரம் நிவின் பவுலி ஹீரோவாக நடிக்க, தில்லு முல்லு இஷா தல்வார் ஹீரோயினாக நடித்தார். 2012-ம் ஆண்டில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, வசூலிலும் சாதனை படைத்தது. இப்போது இந்தப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்கின்றனர். தனுஷை வைத்து யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய ஜவஹர் இப்படத்தின் தமிழ் ரீ-மேக்கை இயக்குகிறார். மலையாளத்தில் நடித்த இஷா தல்வாரே தமிழ் ரீ-மேக்கிலும் நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதுகுறித்து இஷா தல்வார் கூறியதாவது, தட்டத்தின் மரயாத்து படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. அதனால் தமிழிலும் என்னை நடிக்க கேட்டனர். தமிழில் சில மாற்றங்கள் செய்து இப்படத்தை இயக்குகின்றனர். செப் 10ம் தேதி முதல் தமிழ் ரீ-மேக்கிற்கான ஷூட்டிங் துவங்குகிறது. தற்போது நான் சிமா விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றுள்ளேன். நிகழ்ச்சியை முடித்து திரும்பியதும் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன். இந்தப்படத்திற்கு பிறகு தமிழில் எனக்கு நல்லதோர் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in