மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கே.பாக்யராஜ் தன் மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய சித்து பிளஸ்-2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா நடித்த படித்துறை படத்தில் நடித்தார். என்ன காரணமோ அந்தப் படம் ரிலீசாகவில்லை. அதன் பிறகு நடித்த நான் ராஜாவாக போகிறேன் படமும் சரியாக அமையவில்லை. இடையில் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார் அதுவும் வெற்றி பெறவில்லை.
தற்போது அவர் நம்பிக்கொண்டிருப்பது போர்க்குதிரை படத்தைத்தான். இதில் பக்காவனா வில்லேஜ் பொண்ணாக அதுவும் உசிலம்பட்டி சிலாங் பேசும் பெண்ணாக நடித்திருக்கிறார். பருத்தி விரன் முத்தழகி மாதிரி இந்த கேரக்டர் பேசப்படும் என்கிறார். அவருக்கு ஜோடியாக சைதன்யா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
"உசிலம்பட்டியை சுற்றி சுற்றி நிறைய படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் உசிலம்பட்டி மக்களின் வாழ்க்கையை யாரும் படமாக எடுத்ததில்லை. அந்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக போர்க்குதிரை உருவாகி உள்ளது. நாயகி சாந்தினிக்கு உசிலம்பட்டி சிலாங் கத்துக் கொடுத்து உசிலம்பட்டி பெண்களுடன் தங்க வைத்து அவர்களின் மேனரிசத்தை கற்க வைத்து நடிக்க வைத்திருக்கிறோம். இந்தப் படத்துக்கு பிறகு அவரது கேரியர் வேற லெவலுக்கு போகும்" என்கிறார் இயக்குனர் பிரவீன்.
போர்க்குதிரைக்கு நந்தன்ராஜ் இசைஅமைக்கிறார், விஸ்வா, சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள். மெயின் ஸ்ட்ரீமம் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது.